t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 February 2025

சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பள்ளிக் கல்வி 2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து








பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2025





திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:962.

 சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: புகழொடு
மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.

பழமொழி :
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.  

 There is no words superior to one's father's advice.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.

உழைக்கும் நேரம்.

பொது அறிவு : 

1. தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?

 விடை : 5.    

2. பின் பக்கமாகவும் நீந்தும் உயிரினம் எது?

 விடை : இறால்

English words & meanings :

 Meadow. - புல்வெளி
 
Mine. - சுரங்கம்
வேளாண்மையும் வாழ்வும் : 

 நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீர் முக்கியமானது - அதற்கு மாற்றீடு எதுவும் இல்லை. எனவே நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று ஆகும்.

பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.



உலகப் புற்றுநோய் நாள்



உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை

 ஒற்றுமை



 ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார்.



 அவர்களை "ஒற்றுமையாக இருங்கள்" என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.



ஒரு நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே நால்வருக்கும் ஒற்றுமை பற்றிய பாடத்தினை புகட்ட அவர் நால்வருக்குள் ஒரு போட்டியை வைத்தார்.



 நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்புகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். அவர்களும் கொண்டு வந்தனர். நான்கு கொம்புகளையும் கயிறு கொண்டு ஒன்றாக கட்டச் சொன்னார். பின்பு ஒவ்வொருவராக வந்து அந்த கட்டை உடைக்கச் சொன்னார் ஆனால் எவராலும் உடைக்க இயலவில்லை.

  

பின்னர் கட்டுக்களை அவிழ்த்து ஒவ்வொரு கொம்புகளாக எடுத்து உடைக்க சொன்னார்.விரைவில் சுலபமாக உடைத்து விட்டனர் அப்போது செல்வந்தர் "ஒற்¡றுமையின் பலம் என்ன என்று இப்போது புரிகிறதா"?என்று கேட்டார். மேலும்,"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் எவராலும் உங்களை அசைக்க முடியாது" என்றும் கூறினார்

இன்றைய செய்திகள்

04.02.2025

* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.

* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.

Today's Headlines

* The High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.

* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.

* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.

* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.

* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.
Covai women ICT_போதிமரம்


3 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2025





திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :மானம்

குறள் எண் :961

 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் 
குன்ற வருப விடல்.

பொருள்:இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது.

பழமொழி :
Face the danger boldly than live with in fear.


அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே..

---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

பொது அறிவு : 

1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்?

 விடை : ஆகஸ்ட். 

2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது? 

விடை : சீனா

English words & meanings :

 Land. - நிலம் 

 Lighthouse. - கலங்கரை விளக்கம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 உலகம் முழுவதும், நீர் ஆதாரங்கள் மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன,

பிப்ரவரி 03

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 
நீதிக்கதை

 காணிக்கை 



ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றிருந்தான்.

அவன் விரித்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது.



அந்த கழுகின் இறகுகளை மட்டும் வெட்டி அதனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்துக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்து வந்தார்.



இறகுகள் நன்கு வளர்ந்த பின்பு அதனைப் பறக்க விட்டார். கழுகு பறந்து செல்லும்போது ஒரு முயலைப் பார்த்தது. அதை பிடித்து வந்து தன்னை காப்பாற்றிய அவருக்கு காணிக்கையாகக் கொடுத்தது.



இதைப் பார்த்த நரி, "உன்னை பிடித்த வேடனிடம் இந்த முயலை கொடுத்திருந்தால், பின்னாளில் அவன் உன்னை பிடிக்காமல் விட்டிருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய்?" என்று கேட்டது.



அதற்கு கழுகு,"இல்லை. நீ சொல்வது தவறு. வேடனிடம் கொடுத்திருந்தாலும் பின்னாளில் அவன் என்னை பிடிக்கத்தான் செய்வான். ஏனெனில் அது அவனுடைய தொழில். ஆனால் என்னை காப்பாற்றிய அவருக்கு நான் காணிக்கையாக இதைச் செய்தேன்"என்று கூறியது.



நீதி : உதவி செய்தவரிடம் நன்றியுடனும் விசுவாசத்தடனும் இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

03.02.2025

* தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

* விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.

* மாலத்தீவுகளுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது.

* முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்

* ஹாக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன்.

Today's Headlines

* The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20: Chief Minister Stalin is proud that it is the highest in India.

* The registration offices were not functional today, the Sunday, as the land registry department employees did not go to work in protest against working on a holiday.

* India will provide Rs. 600 crore as financial assistance to the Maldives in the coming financial year.

* Vyacheslav Volodin, the chairman of the State Duma, the lower house of the Russian parliament, has said that he will go to India for important negotiations.

* Hockey India League: Sarachi RAR Bengal Tigers team is the champion.

Covai women ICT_போதிமரம்


2 February 2025

ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.





2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.

ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆண்டு வருமானம் 12 லட்சம் மேல் உள்ளவர் செலுத்த வேண்டிய வரி விவரம் - கணக்கீடு


நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, 

1 February 2025

12 லட்சம் வரை வருமான வரி இல்லை - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிய வருமான வரிச்சட்டம்: நிர்மலா சீதாராமன்
புதிய வருமான வரிச்சட்ட மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


இதன் மூலம் 1961ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.


IT new regimeபடி ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதன்பின்,
0 - 4L Nil,
4 - 8L - 5%,
8 - 12L - 10%,
12 - 16L - 15%,
16 - 20L - 20%,
20 - 24L - 25%,
above 24L - 30%


ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.

தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும்.

வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: புதிய வருமான வரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

 பழைய வரி விதிப்பு வருமான வரி முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:





ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி

ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி

ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி

ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி

ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25% வரி

ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி



TETவழக்கு! உச்சநீதிமன்ற வழக்கறிஞருடன் டிட்டோஜாக் தலைவர்கள் ஆலோசனை!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்)
மாநில உயர்மட்டக்குழு நாள்:31.01.2025


TETவழக்கு!

உச்சநீதிமன்ற வழக்கறிஞருடன் டிட்டோஜாக் தலைவர்கள் ஆலோசனை!

"ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்" என்னும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்களான 221 ஆசிரியர்கள் சார்பில் புதுதில்லி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு எண்:52482/ 2023, நாள்:14.12.2023 உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே தொகுப்பு வழக்காக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.அடுத்த விசாரணை 06.02.2025 அன்று நடைபெற உள்ளது.*
 
*மேற்கண்ட நமது வழக்கில்(S.SAKUNTHALA VS UNION GOVERNMENT OF INDIA)உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
திரு P. வில்சன் அவர்கள் நமது தரப்பில் ஆஜராகி வருகிறார். எனவே, இவ்வழக்கை டிட்டோஜாக் சார்பில் நடத்தி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
திரு.சங்கரன் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்
திரு அ.வின்சென்ட் பால்ராஜ், திரு ச. மயில்,
திரு இரா. தாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
திரு. P.வில்சன் அவர்களை நேற்று (30.01.2025) சென்னையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழக்குத் தொடர்பாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விவாதித்தனர். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர்
திரு.அ.மாயவன் Ex:MLC அவர்களும் பங்கேற்றார்

*இவ்வழக்கில் நாம் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக சிலர் யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்களைப் பரப்பி ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்மீது ஆசிரியப் பெருமக்கள் கவனம் கொள்ளத் தேவையில்லை.

*இவ்வழக்கில் டிட்டோஜாக் பேரமைப்பு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளதால் வழக்குச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான விவரங்களை வழக்குத் தொடுத்துள்ள ஆசிரியர்களிடம் அவரவரது சங்கத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும்.

*TET வழக்கு தேசம் தழுவிய வழக்காக மாறியுள்ள நிலையில் அதன் காரணமாக நமது மாநிலத்தில் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதிப்படுத்திடவும் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை வலிமையாக நடத்திட டிட்டோஜாக் உறுதி பூண்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL