t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 April 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2025



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1033.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்.

பொருள்:
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள். மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.

பழமொழி :
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

"""பெரிய நெருக்கடிகள் அரிய மனிதரை உருவாக்கும்,பெரும் ஊக்கம் தரும் செயல்களை அளிக்கும்."" ---ஜான் F கென்னடி

பொது அறிவு : 

1. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றை எடுத்துரைக்கின்றது?  

விடை :கௌதம புத்தர்.       

2. ஒரு மெகா பைட் (mega byte) என்பது எவ்வளவு? 

விடை : 1024 kilo bytes

English words & meanings :

Candy. - மிட்டாய் 

Engagement. - நிச்சயதார்த்தம் 

வேளாண்மையும் வாழ்வும் : 

மழைப்பொழிவு ஏற்படும்போது, தண்ணீர் மண்ணில் ஊடுருவி நிலத்தடிக்குச் செல்கிறது. இது நிலத்தடி நீர் எனப்படுகிறது 

ஏப்ரல் 21

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) 

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். [1] நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 
நீதிக்கதை

 யானையின் அடக்கம்

 யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. 

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்கு யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி:தன் பலம், பலவீனம் 

தெரிந்தவர்கள் அடக்கத்தில் 

சிறந்தவர்களாக இருப்பார்கள். 

இன்றைய செய்திகள்

21.04.2025

* அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

* புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க குண்டுமணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.

* கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி.

Today's Headlines
* Government offices to install prepaid meters: Electricity Regulatory Commission order.

* Gold bead found in ongoing excavation near Kodumbalur in Viralimalai, Pudukkottai district.

* Cloudburst in Jammu and Kashmir: 5 dead in sudden rain and floods.

* Scientists at the University of Cambridge, led by Indian-origin UK scientist Dr. Nikku Madhusudhan, have discovered signs of life on the distant planet K2-18b.

* Barcelona Open Tennis Tournament: Denmark's Holger Rune advances to the final.

* IPL: Bangalore defeats Punjab.


JOIN KALVICHUDAR CHANNEL