t> கல்விச்சுடர் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 March 2025

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் ஒருவாரத்தில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  


7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மத்திய அரசு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கின்றது. முதல் டிஏ உயர்வு ஜனவரி மாதமும், அடுத்த டிஏ உயர்வு ஜூலை மாதம் முதலும் அமலுக்கு வருகின்றன. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு வழக்கமாக மார்ச் மாதத்திலும் ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றது. 

AICPI குறியீட்டு எண்கள்.

தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

அகவிலைப்படி கணக்கீடு

டிஏவைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI (அடிப்படை ஆண்டு 2001=100) – 115.76) / 115.76] x 100.

அக்டோபர் 2024 நிலவரப்படி, AICPI 144.5 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் தரவுகள் வந்தவுடன் இது 145.3 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை , 56% ஆக உயரும். தற்போது டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உள்ளன.

சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.  

அப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயரும்.

அதன்படி, மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கும் ஒருவரின் அகவிலைப்படி, 9 ஆயிரத்து 540 ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 900 ரூபாயாக உயரும்.

Pension Hike: 

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது?

நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 தரவு வந்தவுடன்தான் ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு தீர்மானிக்கப்படும். நவம்பர் தரவு ஜனவரி 1வது வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் எண் பிப்ரவரி 2025 இல் வரும். அதாவது அடுத்த திருத்தம் பிப்ரவரி இறுதிக்குள் அல்லது மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம். அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி மாதம் முதலான டிஏ அரியர் தொகை (DA Arrears) கிடைக்கும். 

 நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்துக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து, வரும் 14 ஆம் தேதி அதாவது ஹோலி பண்டிகைக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது


JOIN KALVICHUDAR CHANNEL