குழுக்களில் அந்த அரசாணை எண் 148 P & AR Department, Dated: 31.10.2018 தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது...
உண்மையான விளக்கம்...
இதற்கு அரசுக் கடிதம் 784/ FR P & AR Dept Dated 04.09.2019* இல் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....
அதாவது....
ஓய்வு பெற இருக்கும் ஒருவர் கடைசி ஆண்டில் பதவி உயர்வு பெற்றார் எனில்...
ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன் ஓய்வு / இறப்பு நிகழ்ந்தாலும் அந்த காலாண்டிற்கு முதல் நாளில் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...
எடுத்துக்காட்டாக...
ஒருவர் 14/06/2024 இல் பதவி உயர்வு பெறுகிறார்...
13/06/2025 இல் தான் பதவி உயர்வு பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது...
ஆனால் அவரின் பணி ஓய்வு 30/04/2025...
ஓராண்டு நிறைவிற்குள் அவர் ஓய்வு பெற்றார்...
இருப்பினும் June month
1/4 quarter இல் வருகிறது...
எனவே அவருக்கு அந்த காலாண்டின் முதல் நாள் 01/04/2025 இல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம் ....
இது தான் அரசாணை மற்றும் அதன் விளக்கம்...
விளக்கக் கடிதத்தில் எடுத்துக்காட்டுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
குழுக்களில் வலம் வருவது போல...
மே மாதம் ஒருவர் ஓய்வு..
அவருக்கு வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு 1/7 எனில்
ஓய்வு பெறும் ஆண்டில் 1/7 அன்று ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது .....
இந்த இடத்தில் மற்றொரு அரசாணையினை கவனிக்க...
அரசாணை எண் 311, நிதித் துறை நாள்: 31/12/2014...
இது என்னவெனில் வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறுகிறார்கள்..
ஓய்வு பெற்றதற்கு அடுத்த நாள் அன்னாரின் ஆண்டு ஊதிய உயர்வு நாள் எனில்...
அவர் ஓய்விற்கு பிறகு " ஓய்வூதியப் பலன்களை " பெறும் நோக்கில் அவருக்கு ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்...
அதாவது
31 மார்ச் 2024 இல் ஓய்வு...
அவரின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு நாள் 1/4 எனில் அவருக்கு retirement benefits க்கு 01/04/2024 இல் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம் ..
அதே போல்
30/06/2024 ஓய்வு - 1/7 regular increment எனில்
30/09/2024 ஓய்வு - 1/10 regular increment எனில்
31/12/2024 ஓய்வு - 1/1
Regular increment எனில்
Retirement benefits க்கு அந்த ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...
அரசாணைகள் & விளக்கக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது..
Mr.K.Selvakumar
Head Master
Madurai