t> கல்விச்சுடர் POCSO சட்டம் - ஆசிரியர்கள்/ த.ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 February 2025

POCSO சட்டம் - ஆசிரியர்கள்/ த.ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்


ஒரு பள்ளியில் ஒரு மாணவிக்கு 3 மாணவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதன் விளைவாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களான ஒரு பெண் ஆசிரியர், ஒரு ஆண் ஆசிரியர் என குற்றம் செய்யாத மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன....?

POCSO சட்டம் என்ன சொல்கிறது?

POCSO என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வகையிலும் மட்டுமே உருவாக்கப்பட வில்லை.

அதில் குற்றம் செய்தவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் தண்டனை வழங்கும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

📌குறிப்பாக ஆசிரியர்கள்/ த.ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்:-

1) போக்சோ சட்டம் பிரிவு 19 மற்றும் 21 என்றால் என்ன?

1)19(1)-இன்படி, 

ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து தெரிந்த எவரும் காவல்துறையிடம் நியாயமான நேரத்தில் புகார் அளிக்க வேண்டும். இது கட்டாயப் புகாரளிக்கும் தேவையாகும், மேலும் புகாரளிக்கத் தவறிய எந்தவொரு நபரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெறும் அளவுக்கு குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

📌 மேற்கண்ட பிரிவில் கல்வி நிறுவனங்களின் நிலை :-

ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்திருந்து, அதை அதிகாரிகளிடம் புகாரளிக்காத எவரும் பள்ளி அளவில் ஆசிரியர்கள் ,மற்றும் தலைமை ஆசிரியர்கள் அடங்குவர்.


📌பிரிவு 19 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் 24 மணி நேரத்தில் குற்றத்தை பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

குற்றத்தைப் பதிவு செய்யத் தவறியவருக்கு ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய இரண்டு வகையான சிறைத்தண்டனை  அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இது போன்று நிகழ்வுகளில் இருந்து ஆசிரியர்கள் தப்பிக்க செய்ய வேண்டியவைகள்:-

1) பாடம் நடத்துவது மட்டும் நமது வேலை என்று ஒதுங்கும் சூழல் தற்போது இல்லை, மாணவர்களுக்கு பள்ளி மற்றும் வெளியில் என எங்கு தவறு நடந்தாலும் நாம் பொறுப்பு என்கின்ற நிலையில் மாணவிகள்/ மாணவர்கள் சார்ந்து சிக்கல் வரும் போது ஆசிரியர்கள் உடன் த.ஆ கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

2) குறிப்பாக பாலியல் சார்ந்த புகார்களை மாணவர்கள் உங்களிடத்தில் கூறியவுடன் , அந்த மாணவியையும் உடன் வைத்துக் கொண்டு குற்றம் நடந்து உள்ளதாக மாணவர் கூறுவதாக குறிப்பிட்டு த.ஆசிரியரிடம் கடிதம் மூலமாக தகவல் கொடுத்து விடவும். 

கடிதத்தை நகல் எடுத்து த.ஆ கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும்.

3) தலைமை ஆசிரியர்கள் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல் ந.க.எண் போட்டு கடிதம் ஒன்றை அனுப்பி விடவும்.

4) த.ஆ PTA & SMC க்கு தகவல் மட்டும் கொடுத்து விடவும், அவர்கள் தீர்த்து வைப்பதாக கூறினாலும் CEO வுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தெளிவாக கூறி விடவும்.

5) எக்காரணம் கொண்டும் PTA,SMC, கட்சி பிரமுகர்களுடன் இணைந்து சமாதான பஞ்சாயத்துகளில் த.ஆ (ம) ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம்.

6) முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து விடவும்.

JOIN KALVICHUDAR CHANNEL