t> கல்விச்சுடர் Old regime.. CPS... Extra 50,000 கழிக்கலாமா? கூடாதா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 February 2025

Old regime.. CPS... Extra 50,000 கழிக்கலாமா? கூடாதா?




சில வரிகளில் 'வரி' பற்றி சிறு தொடர்....

வரி 5...
Old regime.. CPS...
Extra 50,000 கழிக்கலாமா?
கூடாதா?

1) 50,000 80 சிசி டி 2 கழிக்க இயலாதா சார் இந்த ஆண்டு... ஏதாவது சிறப்பு காரணம் உள்ளதா சார்..?

2) 80CCD -2 இல் இந்த ஆண்டு 50k கழிக்க முடியாது என்பதற்கான செயல்முறைகள் ஏதும் இருந்தால் அனுப்பவும் சார்...

3) மதுரை IT meeting (டிசம்பர் 2024) என்ன சொன்னாங்க சார்? ஏன் இந்த ஆண்டு கழிக்க தடை சார்?...

Google இல் 80CCD (1B)
80 CCD 2 என search செய்தால்... அனைத்து விதமான தகவல்களும் கொட்டிக் கிடக்கிறது 😊

தங்களின் புரிதலுக்காக...

1) இதுவரை நாம் 1,50,000 க்கு அதிகமான CPS தொகை 50,000 ஐ கழிப்பது sec 80 CCD 2 அல்ல..
அது 80 CCD (1B).. 

2) இப்போதும் இந்த பிரிவு இருக்கிறது ..
ஆம் கூடுதலாக 50,000 நாம் தனியே முதலீடு செய்து இருந்தால் கழித்துக் கொள்ளலாம்..

3) மத்திய அரசு ஊழியர் கூட அவரின் NPS சந்தா தொகை (10%) இல் 1,50,000 க்கு மேல் உள்ள தொகையில் 50,000ஐ 80 CCD (1B) இல் கழித்து கொள்ள இயலாது ...

4) மத்திய அரசு ஊழியர்கள் 80 CCD (1B) க்காக அவரின் DDO விடம் tier 1 account இல் தனியே 50,000 கூடுதலாக பிடிக்க சொல்லி , அதற்காக பிடித்தம் செய்து இருந்தார்கள் ( 10% பிடித்ததை விட கூடுதலாக ) 
என்றால் மட்டுமே கழிக்க இயலும்... 

5) நமது CPS பிடித்தம் , pfrda இணைய வில்லை என்பது மட்டும் காரணம் அல்ல.. நமக்கு 10% விட கூடுதலாக பிடிக்க வழிவகை இல்லை

6) NPS பிடித்தம் 10% க்கு மத்திய அரசு பங்களிப்பாக (Employer's contribution) 14% வழங்குகிறது...

80 CCD (1B) க்காக ஊழியர் கூடுதலாக செலுத்தும் தொகைக்கு employer's contribution கிடையாது...

7) சுருக்கமாக சொல்வது எனில் NPS 10% deduction ( In voluntary contribution ) அதாவது கட்டாயப் பிடித்தம்

80 CCD (1B) க்காக செய்யப்படும் பிடித்தம் ( voluntary contribution ) அதாவது இது கட்டாயப் பிடித்தம் கிடையாது..
 ஊழியர் விரும்பினால் கூடுதலாக பிடித்தம் செய்யப்படும்.

8) இப்போது நமக்கு வருவோம்...
ஊழியரின் விருப்பத்தின் பேரில் CPS தொகையில் DDO கூடுதலாக பிடிக்க இயலுமா? 
 இயலாது தானே ..
நமக்கு 10% விட கூடுதலாக பிடிக்க முடியவே முடியாது ...

9) இதனால் தான்...
நமது 10% தொகையை (1,50,000 விட கூடுதலாக இருந்தாலும்) 50,000 ஐ 80 CCD (1B) கழிக்க இயலாது என்கிறார்கள் ...

10) அப்படி எனில்? நாம் 80 CCD (1B) பலன் பெற முடியாதா?

நீங்க தனியே Post office/ Bank/ agency/ pfrda online வழியாக NPS tier 1 account துவக்கம் செய்து அதில் 50,000 வரை செய்யப்படும் முதலீடுகளை 80 CCD (1b) இல் காண்பித்து கழித்து கொள்ளலாம்...

11) மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரே PRAN number .. இதில் regular 10% + additional deduction allowed...

12) நமக்கு (CPS இல் இருந்தாலும், GPF இல் இருந்தாலும்) தனியே PRAN number வாங்கி அதில் tire 1 இல் செய்யப்படும் முதலீட்டில்  50,000 வரை 80 CCD (1B) இல் கழித்து கொள்ளலாம்

( எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு GPF பணியாளர் Post office வழியாக 50,000 முதலீடு செய்து 80 CCD (1B) வரிச் சலுகை பெற்றார்...)

13) 80 CCD (1b) இல் கூடுதல் சலுகைகள் பெற நீங்கள் ( யார் வேண்டுமானாலும் ) ( CPS or GPF employees) தனியே NPS tier 1 account இல் முதலீடு செய்து 50,000 வரை வரிச் சலுகை இப்போதும் பெறலாம்...
எந்த ஒரு தடையும் இல்லை ..
(Tier 2 account எனில் கூடுதல் வரிச் சலுகைகள் எதுவும் கிடையாது)

14) கடந்த ஆண்டு வரை பலர் நமது CPS இல் கூடுதல் தொகையை 50,000 கழித்தார்கள் ?

ஆம் இது பற்றி சரியான புரிதல் இல்லாததால் நாம் ( நான் உட்பட பலரும்) பயன்படுத்தினோம்...

15) வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்னது போல...

உங்கள் CPS இல் இதை கழித்தீர்கள் எனில் அது உங்கள் risk....

16) அந்த மதுரை கூட்டத்தில் ஒருவர் கேட்டது போல நாங்கள் (அலுவலகத்தில்) அனுமதிக்க வில்லை...
ஆனால் தனிநபர் IT e-filing போது காண்பித்து refund பெற்றார்?
அது எப்படி?

IT e-filing என்பது தனிநபரின் responsibility..
வருங்காலங்களில் AI தொழில்நுட்பம் பயன் படுத்த உள்ளோம்...
தவறான தகவல் மூலம் வரிச் சலுகை பெற்றது கண்டுபிடிக்க பட்டால் அவர்களுக்கு 200% அபராதம் மற்றும் தண்டனைகள் உண்டு...

17) சில இடங்களில் தவறான refund claim செய்ய உதவிய நபர்கள் (மதுரை) /(ஆசிரியர்கள்) (இராமநாதபுரம்) / ஆடிட்டர்கள் (அருப்புக்கோட்டை) etc மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றார்கள்....

18) DDO அனுமதித்தால் அவரும் responsible ஆகிறார் ...🙏 
Individual e-filing போது எனில் individual மட்டும் responsible 

19) இவை அனைத்தும் (80 CCD (1b)) Old regime க்கு மட்டுமே பொருந்தும்... New regime இல் இந்த வரிச் சலுகை கிடையாது..

20) *New regime* இல் 80 CCD 2 allowed என ஒரு பதிவை பார்த்தோமே???

ஆம் 80 CCD 2 என்பது வேறு ஒரு பிரிவு...

21) 80 CCD 2... என்பது Employer's contribution.. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% சில மாநிலங்களில் 12% நமக்கு 10%.

22) 80 CCD 2 deduction
Old regime, New regime இரண்டிலும் உண்டு...
( No limit... No ceiling)

23) இது 80 C (1,50,000) சேமிப்பில் உள்ளடக்கம் கிடையாது..
அதாவது 1,50,000 விட அதிகமாக உள்ள பிரிவு...

24) ஆனால் இதனால் நமக்கு எந்த ஒரு பலனும் கிடையாது ☺️
அதாவது *employer's contribution ஐ நமது வருமானத்தில் சேர்க்க* வேண்டும்...
பிறகு 80 CCD 2 இல் அதை அப்படியே (எவ்வளவு தொகையானாலும்) கழித்துக் கொள்ளலாம் 🤣...

(பருத்தி மூட்டை godown லேயே இருந்திருக்கலாம் moment....🤣🤣🤣) 

25) employer's contribution *வருமானத்தில் சேர்க்காமல்* 80 CCD 2 *deduction* செய்யக் கூடாது....

இப்போதும் சமூக வலை தளங்களில்.... சில பதிவுகள்.. 

IT officer கழிக்க சொன்னார்..
RTI இல் கழிக்கலாம் என்றார்கள்...
ஆடிட்டர் கழிக்கச் சொன்னார் 😞...

என்பவர்களுக்கு பதில்..

...

ஆம் 10% பிடித்தத்தை விட கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் கழிக்க அனுமதிக்கலாம் 😛
 10% CPS தொகையில் கழிக்க இயலாது

தகவலுக்காக 
 க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்

JOIN KALVICHUDAR CHANNEL