38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி.மதுமதி அவர்கள் மாற்றம். சுற்றுலா & பண்பாட்டு துறையின் செயலாளர் மருத்துவர் திரு.சந்திர மோகன் அவர்கள் நியமனம்.
கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெ.ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹூ, வினீத், ஆபிரகாம், ஆல்பி ஜான் வர்கீஸ், பிரபாகர், சத்யபிரதா சாகு உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.