t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2025



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இனிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

பொருள்:
ஊக்கம் மிகுதியே ஒருவனுக்கு பெருமையாகும்: ஊக்கமின்றி உயிர் வாழ எண்ணுதல் சிறுமையேயாகும்.

பழமொழி :
சௌரியம் பேசேல்.  

 Boast not of your strength.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

--அன்னை தெரசா

பொது அறிவு : 

1. உங்கள் உள்ளங்கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது? 

விடை: காலியம்

2. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை எவ்வளவு? 

விடை: பூஜ்ஜியம்

English words & meanings :

 Bookstore. - புத்தகக் கடை

 Bus stop. - பேருந்து நிறுத்தம்
பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர் அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
நீதிக்கதை

 கறையும்‌ இருளும்‌ 



இரவு நேரம்‌. நாரையொன்று காற்றில்‌ பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும்‌ பட்டப்‌ பகல்போல்‌ ஒளி பரவியிருந்தது. அந்த ஒளியில்‌ வெப்பம் இல்லை.குளிர்ச்சி நிறைந்த அந்த ஒளி எங்கிருந்து வருகிறது? என்று தேடித்தான்‌ அந்த நாரை பறந்து கொண்டிருந்தது.  

உலகமமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை சென்ற இடமெல்லாம்‌ அந்த ஒளி நிறைந்‌திருந்தது, நாரை, சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது. 

உயரத்தில்‌ ஒளித்தகடு போல்‌ வட்டநிலா அழகுடன்‌ விளங்கியது. நாரை அதன் அழகில்‌ மயங்கி நிலாவையே பார்த்துக்‌ கொண்டு நின்றது. 

நிலா அழகாகத்தான்‌ இருந்தது. உலகம் முழுவதும்‌ ஒளி பரப்பும்‌ பேரொளியைப்‌ பெற்றுத்தான்‌ விளங்கியது. ஆனால்‌ அந்த ஒளிநிறைந்த நிலாவின்‌ இடையிலே ஓர்‌ இருட்டுப்‌ பகுதியும்‌ இருந்தது. அது நிலவின்‌ இடையில்‌ ஒரு கறை போல இருந்தது. இவ்வளவு அழகான நிலவின்‌ இடையில்‌ இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது நாரை.

தன்னிடம்‌ உள்ள கறையை நீக்கிக்‌கொள்ளாமல்‌ உலகைச்‌ சூழ்ந்துள்ள இருளை ஓட்டப்‌ புறப்பட்டு விட்டதே இந்த நிலவு! இதன்‌ கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப்‌பட்டது. 

அது நிலாவை நோக்கிப்‌ பறந்தது.எவ்வளவு உயரம்‌ பறந்தும்‌ அதனால்‌ நிலாவை அடைய முடியவில்லை . போகப்‌ போக மேலும்‌ மேலும்‌ தொலைவில்தான்‌ இருந்து கொண்டிருந்தது. 

நிலாவை நெருங்க முடியாது என்று கண்டு கொண்ட நாரை, அருகில்‌ காற்றில்‌ தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப்‌ பார்த்து “மேகமே, நிலா தன்னிடமுள்ள கறையைப்‌ போக்கிக்‌ கொள்ளாமல்‌, உலகில்‌உள்ள இருளைப்‌ போக்குகிறதே இதன்‌ கருத்து என்ன ? என்று கேட்டது.

 “நாரையே, உயர்ந்த பெரியோர்கள்‌ தங்கள்‌ துன்பத்தை விட பிறருடைய துன்பத்தை நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள்‌. அது போன்றதுதான்‌ நிலாவின்‌ இயல்பு!” என்றது மேகம்.

நிலாவின்‌ உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக்‌ கொண்டே இறங்கி வந்தது நாரை.

கருத்துரை :-- தன்‌ துன்பத்தைக்‌ காட்டிலும்‌ பிறர்‌ துன்பத்தைப்‌ பெரிதாக நினைத்து அதைப்‌ போக்க உதவி செய்வதே நல்லோர்‌ இயல்பாகும்‌.

இன்றைய செய்திகள்

18.02.2025

* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

* சென்னையில்பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை வழிகாட்டுதல் வெளியீடு.

* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.

* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.

Today's Headlines

* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.

* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.

* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.

* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.

* In the 6th Pro Archery League, India won by defeating Spain.

* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC.

Covai women ICT_போதிமரம்


JOIN KALVICHUDAR CHANNEL