t> கல்விச்சுடர் ஆண்டு வருமானம் 12 லட்சம் மேல் உள்ளவர் செலுத்த வேண்டிய வரி விவரம் - கணக்கீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 February 2025

ஆண்டு வருமானம் 12 லட்சம் மேல் உள்ளவர் செலுத்த வேண்டிய வரி விவரம் - கணக்கீடு


நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, 


மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் செலுத்த வேண்டிய வரி விகிதம் இது:

ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30%




புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய நிம்மதி தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மேலும், வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை, தற்போதைய இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.



JOIN KALVICHUDAR CHANNEL