t> கல்விச்சுடர் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பின் போது தலைமை ஆசிரியர் உயிரிழப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 January 2025

எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பின் போது தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பில்...

தலைமை ஆசிரியர்
உயிரிழப்பு...

( திருவாரூர் மாவட்டம்...)





 மன்னார்குடி அருகே எண்ணும் எழுத்தும்
பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி தலைமையாரியர் மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.

மன்னார்குடி புதிய வீட்டு வசதி வாரிய 
குடியிருப்பை சேர்ந்த ம. மோகன் (59) கோட்டூர்
அருகேயுள்ள சிங்கமங்கலம் அரசு தொடக்
கப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி
வந்தார். இவருக்கு, கடந்த மாதம் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு
ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் மீண்டும் பணியில்
இணைந்துள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை கோட்டூரில் நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் பங்கேற்ற மோகனுக்கு இருதயவலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உதவியாக வந்த மகன் மணிஷ் உடனடியாக காரில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL