t> கல்விச்சுடர் ஒரு தாயின் வாழ்த்து.... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 January 2025

ஒரு தாயின் வாழ்த்து....




அன்பு மகனே,
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
என்ற கீதையின் சாரமும்
யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்?
யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ
அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள்!
அதனால் ஒரு நஷ்டமுமில்லை
உன்னோடு நான் இருக்கிறேன்! அது போதாதா?
என்ற கீதையின் பொன்மொழியும்
என்றும் உன் மனதில் நிருத்திக்கொள் மகனே
மன பிரளயம் உன்னில் உருவானால்
குளிர்தென்றல் உன்னை தாலாட்டட்டும்
மன இருள் உன்னில் படர்ந்தால்
வாழ்வின் ஒளியை சூரியன் காட்டட்டும்
தனிமை உன்னில் நடனமாடினால்
நட்பான கரங்களை விண்மீன்கள் நீட்டட்டும்
தொலைத்தூரத்தில் நான் இருந்தாலும்
இயற்கை அன்னை உன் அருகில் இருப்பது போல்
என் மனமும் உன் அருகில் இருக்கும் மகனே
அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வுடன்
ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ கடவுள் என்றும்
உன்னை வாழ்த்தட்டும் என் இனிய மகனே..

M.Bhuvaneshwari
Maths BT
Govt Muslim HR Sec School
Vellore 

JOIN KALVICHUDAR CHANNEL