t> கல்விச்சுடர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 January 2025

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகத் திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி திருநெல்வேலி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம், தர்மபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (31.01.2025) வெளியிட்டுள்ள உத்தரவில்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக
பிரதாப் நியமனம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் 

திருவண்ணாமலை ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டு தர்ப்பகா ராஜ் நியமனம்


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன் நியமனம்

நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் நியமனம் 

 தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன் நியமனம் 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ் குமார் நியமனம் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிவ சவுந்தரி வள்ளி நியமனம்

சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராகச் சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வணிகவரி இணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 தொழில்நுட்ப கல்வி ஆணையராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராகக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 விழுப்புரம் ஆட்சியராக இருந்த பழனி அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித்ஆதித்ய நீலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் பொதுத்துறை இணை ஆணையராகச் சராயு நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியாக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 சிதம்பரம் துணை ஆட்சியராக கிஷன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 எம்.டி.சி. மேலாண் இயக்குநராகப் பிரபு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL