தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதல்வர் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆனது 38%ல் இருந்து 42% ஆக உயர்த்தப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்.1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் 16 லட்ச அரசு அலுவலர்கள், ஆசியர்கள் பயன்பெற இருக்கிறார்கள்.