t> கல்விச்சுடர் உங்க மூக்குமேல கண்ணாடி போடற தழும்பு அசிங்கமா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க..! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 March 2022

உங்க மூக்குமேல கண்ணாடி போடற தழும்பு அசிங்கமா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க..!



பொதுவாக சில பெண்களுக்கு கண்ணாடி அணிவதனால் மூக்கிடையே கருமையாக தழும்புகள் போன்று காணப்படும். இது பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும்.

அதனை போக்க கண்ட கண்ட கிரீம்களை போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். அந்தவகையில் அந்த தழும்பை போக்கும் அற்புத மூன்று Tips இங்கு பார்ப்போம்.

Tips 1
கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ், அரை வெள்ளரிக்காயை வெட்டி அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவி, மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.

பழத்தையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும். இவற்றையும் ஒரு பவுலில் தனியாக எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் பேஸ்ட் இரண்டு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தக்காளி பேஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerine) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு தழும்புகள் ஏற்பட்ட இடத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள்.
இந்த முறையை இரவு தூங்குவதற்கு முன் செய்து மறுநாள், காலை முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்ணாடி தழும்பு மறைய (spectacle marks) ஆரம்பிக்கும்.

தழும்பு மறைய டிப்ஸ் 2 – சிறிதளவு ஓட்ஸை மிக்ஷி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கிளீன் பவுலில் அரைத்த இந்த ஓட்ஸ் பவுடரை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு  ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டு போல் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை தழும்புகள் மீது அப்ளை செய்து, ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்புகள் மறைந்து விடும். சருமம் பொலிவுடன் காணப்படும்.

 
Tips 3

வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவிவிட்டு. வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
இந்த கட் செய்த துண்டுகளை தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்பு 15 நிமிடுங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்புகள் (spectacle marks) மறைந்து விடும்.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK