t> கல்விச்சுடர் எல்லாம் நன்மைக்கே- சிறுகதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 April 2021

எல்லாம் நன்மைக்கே- சிறுகதை

*வெங்காயம் கண்ணீரை மட்டுமன்றி, காசையும் வரவழைக்கும்!*

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரையைத் துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.
அடுத்து சின்னதாய் ஓர் இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

"ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே" என்றான் துடைக்க வந்தவன்.

"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கவிரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!" என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல.

கையில் 10 டாலர்கள் மட்டுமே இருந்தன.
அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.

பக்கத்துக் குடியிருப்புப் பகுதியில் கூவிக்கூவி விற்றான்.
10 டாலர் லாபம் கிடைத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரியானான்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி,
"ஈமெயில் முகவரி இல்லை" என்று பதிலளிக்க,

"ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்
தெரிந்திருந்தால்…?" என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

"அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருந்தி ருப்பேன்" என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே....
'எல்லாம் நன்மைக்கே' என்று எண்ணி தொடர்ந்து முயற்சி
செய்தால் மிகப்பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK