t> கல்விச்சுடர் புதிய பாடத்திட்ட புத்தகம் படியுங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 April 2020

புதிய பாடத்திட்ட புத்தகம் படியுங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை



கொரோனா விடுமுறை நாட்களில், புதிய பாடத்திட்ட புத்தகங்களை படித்து, பயிற்சி பெறுமாறு, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஒரு மாதமாக விடுமுறையில் உள்ளஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள்சார்பில், பல்வேறுஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதாவது, 'வீட்டில் இரு; விலகி இரு' என்ற விதிகளை பின்பற்றி,ஆசிரியர்கள் தங்கள்குடும்பத்தினரை, கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.


அதேநேரத்தில், விடுமுறை காலத்தை, அடுத்த கல்வி ஆண்டுக்கான முன்தயாரிப்பு காலமாக எடுத்து, கற்பித்தல்பணிகளுக்கானதிட்டங்கள் தயாரிக்க வேண்டும்.இது குறித்து, முதன்மை கல்விஅதிகாரிகள் தரப்பில், ஆசிரியர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'களில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அதில், அனைத்துஆசிரியர்களும், இந்த விடுமுறை காலத்தில்,தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்துக்கான பாடங்களை படித்து, எளிதான கற்பித்தலுக்கு தயாராகவேண்டும்.கடந்த கல்வி ஆண்டில், புதிய பாட புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை என, பல ஆசிரியர்கள் கூறிய நிலையில், தற்போது கிடைத்துள்ள நேரத்தை, நல்ல முறையில் பயன்படுத்தி, வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL