கொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தினை பயன்படுத்தி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துல்லதை வரவேற்கின்றோம்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழகளும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் விதமாக அவர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டம் தான் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் இதில் ஏராளமானோர் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று பயன்பெற்று வருகின்றனர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைமை நிலையில் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று பயண்பெரும் வகையில் தமிழக அரசு அனுமதிக்கப்பட்டுள்ள 110 தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெறும் விதமாக இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
அதேபோன்று சுமார் 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதித்து உதவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்
நிறுவனத் தலைவர்
சா.அருணன் கேட்டுக்கொண்டார்.