t> கல்விச்சுடர் ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவை துவங்குமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 April 2020

ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவை துவங்குமா?


21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவைகள் துவங்கும் என்று வெளியான செய்திகளை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது.

ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில் சேவையை துவக்குவதற்கான முயற்சிகளில் ரயில்வே ஈடுபட்டுள்ளதாகவும், அனைத்துப் பணியாளர்களும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஏப்ரல் 14 ஆம் தேதி 21 நாள் ஊடரங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு பிந்தைய காலகட்டத்திற்கான ரயில் முன்பதிவுகள் துவங்கிவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம், ஊரடங்கு முடிந்த பின்னரும், கொரோனா கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மட்டுமே பயணியர் ரயில் சேவையை துவக்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL