t> கல்விச்சுடர் கொரோனா நோயாளி மூலம் எத்தனை பேருக்கு தொற்றுநோய் பரவும்?... அதிர்ச்சி தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 April 2020

கொரோனா நோயாளி மூலம் எத்தனை பேருக்கு தொற்றுநோய் பரவும்?... அதிர்ச்சி தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், 30 நாட்களுக்கு வெளியில் சுற்றினால், 406 பேருக்கு தொற்றுநோயை பரப்ப முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வின் மூலம் தெரியவந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் லவ் அகர்வால் (Lav Agarwal) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இவ்வாறு, தொற்றுநோயை பரப்பும் பெருந்தொற்று நோயாளிகள் அல்லது, தொற்றை பரப்பும் முகவர்களை, மருத்துவ உலகம், ஆர்-நாட் (R-naught) அல்லது ஆர்-ஜீரோ (R0) என அழைக்கிறது.

வீடுகளில் தனித்திருத்தல் மூலம், கொரோனா தொற்றுநோய் பரவலை எளிய முறையில், பெரியளவில் செலவின்றி, உயிர்ச்சேதமும் இன்றி தடுக்கலாம் என்பதால், ஊரடங்கு நடைமுறையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன.



JOIN KALVICHUDAR CHANNEL