t> கல்விச்சுடர் பயணிகள் ரயில் சேவை குறித்து முடிவு எடுக்கப்படவில்லை ; ரயில்வே துறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 April 2020

பயணிகள் ரயில் சேவை குறித்து முடிவு எடுக்கப்படவில்லை ; ரயில்வே துறை



கொரோனா பரவுதல் தடுப்பு நடவடிக்கையான இக்காலங்களில் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் கூறியதாவது : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி 2 நாட்களாக பல்வேறு செய்திகள், ரயில் சேவை இயக்கவது குறித்து வந்து கொண்டிருக்கின்றன. பல ரயில்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து பயணத்தைத் தொடங்குவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதுகுறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. ஊரடங்கு முடிந்த பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயீல் சேவை இயக்குவது குறித்து சிறந்த சாத்தியமான முடிவுகளை ரயில்வே நிர்வாகம் எடுக்கும். அந்த முடிவுகள் குறித்து, தொடா்புடைய அனைவருக்கும் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டது.

நன்றி: தினமலர்

JOIN KALVICHUDAR CHANNEL