t> கல்விச்சுடர் ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை ! எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 April 2020

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை ! எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு!

ஜூன் 30 ஆம் தேதி வரை எஸ் பி ஐ வங்கி ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி வரம்பை மீறி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ் பி ஐ ஏடிஎம்களில் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாகப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL