நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தேர்வு மையம் தொடர்பாக, நாளைக்கும், திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அடுத்த மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வுகள் கொரோனா தாக்கத்தால் தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விண்ணப்ப நடைமுறைகள், 3 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துவிட்டன. விண்ணப்பதாரர் தேர்வு மையங்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தேர்வு மைய நகரங்களில் தற்போது கொரோனா பாதிப்பு வாய்ப்புகள் அதிகம் இருந்தால், வேறு நகரத்திற்கு, நாளை (14ம் தேதிக்குள்) மாற்றிக்கொள்ளலாம். முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களையும், http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.திருத்தங்களுக்கான கூடுதல் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங், பேடிஎம் மூலம் செலுத்தலாம். விபரங்களுக்கு, 87000 28512, 81783 59845 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.