கொரோனா வைரஸ் (Coronavirus) என்ற சொல்லை பயன்படுத்த துர்க்மெனிஸ்தான் தடை விதித்திருக்கிறதுதடையை மீறி பொது இடத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசியவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
துர்க்மெனிஸ்தான் அரசு நாட்டு மக்களிடையே நோய்தொற்று பீதி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைத் தடை செய்துள்ளது.
மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில் அந்நாட்டில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் பரவுவதைத் தடுப்பதற்காக நூதன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதாவது, கொரோனா வைரஸ் (Coronavirus) என்ற சொல்லை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.
ஊடங்களில் மட்டுமின்றி பொது இடங்களில் கொரோனா வைரஸ் பற்றி பேசினால்கூட கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.அதிபர் குர்பங்குலி பெர்திமுகம்மதோவ் அரசு ஊடகங்கள் அனைத்திலும் கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். சுகாதார விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களிலும் இந்த வார்த்தை இருக்கக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்.
மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் இந்த வார்த்தையை தடை செய்வதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.