தமிழகத்தில் இன்று புதிதாக 76 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை இன்று (செவ்வாய்கிழமை) மாலை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்றால் ஒருவர் பலியாகியிருப்பதன்மூலம், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.