அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் (Bronx) பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடியா எனப்படும் அந்த புலி வறட்டு இருமல் மற்றும் பசியின்மையால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், அந்த புலியின் வளர்ப்பாளருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருந்ததாகவும், அவரிடம் இருந்து புலிக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது, இதனிடையே, அங்குள்ள மேலும் 3 புலிகள் மற்றும் 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் வறட்டு இருமல் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.