t> கல்விச்சுடர் ஊரடங்கு நீட்டிப்பு- திருப்பதி கோவிலில் மே 3ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 April 2020

ஊரடங்கு நீட்டிப்பு- திருப்பதி கோவிலில் மே 3ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து


கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான விரிவான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட உள்ளது.கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.தற்போது ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், அதுவரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சின்கால் தெரிவித்துள்ளார். 

JOIN KALVICHUDAR CHANNEL