t> கல்விச்சுடர் பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 April 2020

பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு


பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில்பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பாட்னாவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தை சேர்ந்த பன்ஜ்வார் என்ற கிராமம்.இங்கு,கடந்த மாதம் 16 ஆம் தேதி  ஓமன் நகரிலிருந்து நபர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. பின்னர் சோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதன் பின் அவர் நெருங்கி பழகி வந்த அவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


குடும்பத்தினருடன் சகஜமாக பழகியதுடன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம்காட்டி வந்துள்ளார்.கடந்த 4-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். உடனே அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது அதிர்ச்சி தரும் விதமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 28 பேர்களில் பெண்கள், குழந்தைகள் என 22 பேருக்கு கொரோனா வைரஸ் கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞர் மூலம்தான் அது பரவியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.உடனடியாக அந்தக் கிராமம் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கிராம மக்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு கம்பெனி ராணுவப்படையும் அங்கே நிறுத்தப்பட்டு இருக்கிறது. கிராம மக்களின் நடமாட்டம் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.சிவான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL