கொரோனா நிவாரணத்திற்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
அவ்வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளி ஆசிரியை வசந்தா சித்திரவேலு, தனது சொந்த பணம் ரூ.50 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரின் நிவாரண நிதி கணக்குக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.