எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடக்க இருக்கிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், 25 வயதுக்கு மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வயது வரம்பை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை தளர்த்தியது. 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டது. அத்துடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்குள் மாணவர்கள் ஆன்லைனின் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுவரை விண்ணப்பிக்காத மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||