ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி கிடைக்காது என்று அவரது அணியைச் சேர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி மறைமுகமாக தெரிவித்திருத்து அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா – எடப்பாடி பழனி்ச்சாமி
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக(அம்மா) கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். .
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “இரட்டை இலைக்கும், இரட்டை விளக்கு மின்கம்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
தி.மு.க. வுக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. நிச்சயம்.
எங்கள் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும்” என்று பதில் அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “ஆர்.கே. நகரில் சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “எதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம்” என்றார்.
“எடப்பாடி கூறியது, சசிகலா படத்தை வைத்து ஓட்டு கேட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளதே. இப்படி வெளிப்படையாக பேசுகிறாரே” என்று அரசியல் வட்டாரத்தில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||