t> கல்விச்சுடர் சில்லறை தட்டுப்பாட்டை போக்க 200 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 April 2017

சில்லறை தட்டுப்பாட்டை போக்க 200 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி


புதுடெல்லி: சில்லறை தட்டுப்பாட்டை போக்க விரைவில் ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
பிரச்சினையை சமாளிக்க ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்ட போதிலும் சில்லறை பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை. புதிய ரூ.500 நோட்டுகள் அதிகம் புழக்கத்திற்கு வந்ததை அடுத்து பணத்தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் சில்லறை பிரச்சினையை போக்கும் விதமாக புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது. அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நோட்டுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அச்சடிக்கும் பணிகள் ஜுன் மாதம் தொடங்கும் என தெரிகின்றன.


JOIN KALVICHUDAR CHANNEL