t> கல்விச்சுடர் தனுஷுக்கு சிக்கல் தந்திருக்கும் DNA பற்றி தெரியுமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 March 2017

தனுஷுக்கு சிக்கல் தந்திருக்கும் DNA பற்றி தெரியுமா?


நடிகர் தனுஷின் படங்கள் வெளியாகும் வேகத்தை விட சர்ச்சைகள் வேகமாக வருகின்றன. அப்படி ஒன்றுதான் நீதிமன்றத்துக்கு வந்தது. கதிரேசன் - மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தி வரும் இந்த வழக்கு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பில் இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. இவர்கள் அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தார்கள்.
இதற்காக நீதிமன்றத்தில் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெயர் மாற்றம் செய்ததற்கான கெஸட் நகல்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியதால் 'சான்றிதழ்களில் சந்தேகம் உள்ளது' என கதிரேசன் - மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் சொன்னார்.
டி.என்.ஏ சோதனை செய்தால் உடனே முடியும் வேலையை இழுத்தடிப்பதால் சோஷியல் மீடியாவிலும் இது பற்றி அதிகம் பேசப்பட்டது. கதிரேசன் தரப்பில் டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து என்ன ஆகப்போகிறது என்பதுதான் மர்மமாகவே இருக்கிறது. எல்லோருக்கும் டி.என்.ஏ தெரியும். ஆனால், அது எப்படி செய்யப்படுகிறது என்பது தெரியுமா?
உயிரின் அடிப்படை மூலக்கூறே டி.என்.ஏ தான். மற்ற எந்த மூலகூறுகளுகள் போல் இல்லாமல், டி.என்.ஏ தன்னைத் தானே நகல் செய்துகொள்கிறது. இதுதான் உயிரின் அடிப்படை. இந்த மூலக்கூறை ஆராய்ந்தால், அதில் ஒரு பேட்டர்ன் கிடைக்கும். அதை வைத்து இரண்டு பேருக்கிடையில் ரத்த தொடர்பு இருக்கிறதா, அவர்தான் நிஜமான உயிரியல் பெற்றோரா என்பதை கண்டறிய முடியும்.
ரத்தம், முடி, தோல் அல்லது உடலில் இருக்கும் எதாவது ஒரு திசுவின் மாதிரி கிடைத்தால் போதும். அதில் இருக்கும் டி.என்.ஏ. மூலக்கூறுவை ஆராய்ந்து அதன் வடிவத்தை பதிவு செய்துக்கொள்ளலாம்.



பொதுவாக கீழ்கண்ட காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படும்.
1) Newborn screening
பிறந்த குழந்தைக்கு செய்வார்கள். அமெரிக்காவில் இது அதிகம். இதன் மூலம் பிறந்த குழந்தைக்கு எதாவது குறை இருந்தால், அதை ஆரம்பத்திலே சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
2) Forensic testing
குற்றவாளிகளை கண்டறிய... எல்லா குற்றங்களிலுமே அதை செய்பவர்கள் எதாவது ஒரு க்ளூவை விட்டுச் செல்வார்கள் என்பார்கள். அப்படி அவர்கள் விட்டுச்செல்வது அவர்கள் உடல் சார்ந்த விஷயம் என்றால், அதிலிருந்து டி.என்.ஏ. மாதிரியை எடுத்து குற்றவாளிகளை கண்டறிய முயற்சி செய்வார்கள்.
3) carrier testing
இதில்தான் பெற்றோர் இருவரின் டி.என்.ஏ மாதிரியை வைத்து மகன் அல்லது மகளின் டி.என்.ஏவுடன் ஒப்பிடுவார்கள். தனுஷ் வழக்கு போன்ற விஷயத்துக்காக மட்டுமில்லாமல், பரம்பரையாக இருக்கும் நோய் பற்றி அறியவும் இந்த டெஸ்ட் பயன்படும்.
4) Prenatal testing
இது குழந்தை பிறக்கும் முன்னரே செய்யப்படும் டெஸ்ட். பிறக்க போகும் குழதைக்கு ஜெனடிக் டிஸ் ஆர்டர் எதாவது இருக்குமா என முன் கூட்டியே அறிவதற்காக செய்யப்படுவது,.
இன்னும் பல காரணங்களுக்காக டி.என்.ஏ டெஸ்ட் செய்வதுண்டு.
தனுஷ் விஷயத்தில் டி.என்.ஏ டெஸ்ட் செய்யப்படுமா என்பதை விரைவில் நீதிமன்றம் உறுதி செய்யும். கதிரேசன் தம்பதி தரப்பில் டி.என்.ஏ. டெஸ்டுக்கு தயார் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL