t> கல்விச்சுடர் கோக், பெப்சி தடை எதிரொலி: வருகிறது பாட்டில் இளநீர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 March 2017

கோக், பெப்சி தடை எதிரொலி: வருகிறது பாட்டில் இளநீர்

கோடைக்காலம் நெருங்கி வருகிறது என்பதை, தினமும் சுட்டெரிக்கும் வெயில் எச்சரித்து வருகிறது.இதற்கிடையே கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க வணிகர்கள் சங்கம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, இளநீரை பாட்டிலில் விற்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான முடிவு உடுமலைப்பேட்டையில் நடந்த தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகள் அவரவர் இடத்தில் இறக்கும் இளநீரை சுகாதாரமான முறையில் பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி பெரியசாமி கூறுகையில், 'தற்போது நிலவும் வறட்சியால், தென்னை உற்பத்தி 7 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பதிலாக இயற்கையான இளநீரை குடிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. எனவே, அதை நாங்களே செய்ய முடிவு எடுத்துள்ளோம்' என்றார்


JOIN KALVICHUDAR CHANNEL