நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்கிறது? தமிழக மாணவர்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவது ஏன்? என சரமாரியாக கேள்விக் கணைகளை மாநில அரசை நோக்கி தொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு இடங்களை முழுமையாக வழங்க தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரண், உத்தரவில் கூறியதாவது: நீட் தேர்வு வேண்டாம் என தமிழத்தில் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் கூறுவதை அரசு ஏற்று நீட் தேர்வை வேண்டாம் என கூறுகிறது. நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறுவதற்கு தரமான கல்வியை வழங்கவில்லை என்றுதானே அர்த்தம் (கரெக்டா சொன்னீங்க கணம் கோர்ட்டார் அவர்களே..!). பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழகம் மட்டும் நீட் தேர்வை ஏற்க மறுப்பது ஏன்? தமிழக மாணவர்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவது ஏன்? (ஏன்னா… அவங்க நடத்துற அரசுப் பள்ளிகளில் அவ்வளவு தான் ஐயா சொல்லித் தராங்க…(அரசுப் பள்ளிகள் என்று சொல்லியதும் தனியார் பள்ளிகள் காலரைத் தூக்கிவிட வேண்டாம்.. நீங்கள்கொள்ளைக் கூட்டம்.. உங்களைப் பற்றி பேச விரும்பாததே உங்களைக்குறிப்பிடாததற்குக் காரணம்). எப்படி அதிக மார்க் வாங்குறதுன்ற குறுக்கு வழியை (டீசண்ட்டா சொல்லனும்னா ஷார்ட் கட்) சொல்லித் தருகிறார்களே தவிர பாடத்திலுள்ள விஷயங்களைப் பற்றிய புரிதலைச் சொல்லித் தருவதில்லையே.. பாவம் நம்ம பசங்க என்ன பண்ணுவாங்க..?) தகுதியான மாணவர்களுக்கு தகுதியான கல்வி மறுக்கப்படுவது அவமானத்திற்குரியது. மருத்துவப்படிப்பிற்கு கோடி கோடியாக செலவு செய்யும் மாணவர்கள் அதனைத் திருப்பி எடுப்பதற்குத்தான் பார்ப்பார்களே தவிர அவர்கள் எப்படி சேவை செய்வார்கள்?
(நல்லா கேளுங்க நீதிபதி அவர்களே… ஒவ்வொரு சாமானியனின் கேள்வி… இப்படியெல்லாம் கேட்ட பிறகாவது ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்..) 2016-ல் அரசு ஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன? அவற்றில் எத்தனை நிரப்பட்டன? மருத்துவ கவுன்சில் விதிகளின்படி முறையாக மருத்துவ இடஒதுக்கீடு செய்யப்பட்டதா? இத்தனை கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசும் இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||