சென்னை: ஆர்.கே.நகரில் மதுசூதனன் மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் விலகிச்சென்றனர். ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டதால் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கும் சசிகலா தரப்புக்கு தொப்பியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடையே தங்களின் சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் இருக்கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுசூதனன் ஆதரவாளர்களும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு மூண்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாகி கலைந்து சென்றனர். ஓபிஎஸ் அணியினரும் தினகரன் தரப்பினரும் மோதிக்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||