கிச்சன் டாக்டர்
நோய்களை குணப்படுத்துவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் இயற்கை உணவுகளை நம் முன்னோர்கள் பல வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் மூலிகைகளைச் சேர்த்து குழம்பாக்கி சாப்பிடச் சொன்னதும் முக்கியமான ஒரு வழிமுறை. ‘மருந்து குழம்பு’ என்று வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த அதன் செயல்முறை பற்றியும் பலன்கள் பற்றியும் விளக்குகிறார் சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ்.
‘‘உடலில் சேரும் கழிவுகளை அகற்றி உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக்கப் பயன்படுவதுதான் மருந்து குழம்பு. ‘உடலினை உறுதி செய்’ என்றும், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்றும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த நம்மவர்கள், முன்பு மாதம் ஒருமுறையாவது மருந்து குழம்பை வீட்டில் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
அது காலப்போக்கில் மாறிவிட்டது. இப்போதும் பிரசவத்துக்குப் பிறகு பெண் உடலைச் சுத்தம் செய்வதற்காகவும், அவளுக்கு ஊட்டம் கொடுப்பதற்காகவும் குழந்தைப் பேறு குழம்பாக கொடுக்கும் பழக்கம் சில குடும்பங்களில் உண்டு. இதன்மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும்’’ என்று மருந்துக் குழம்பின் பெருமைகளை அடுக்கும் மைக்கேல் ஜெயராஜிடம், அதன் சமையல் முறை பற்றிக் கேட்டோம்.
முதலில் மருந்து பொடி செய்துகொள்ள வேண்டும்.
என்னென்ன தேவை:
மிளகு - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 25 கிராம்,
சுக்கு - 1 துண்டு,
நறுக்குமூலம் (அ) கண்டதிப்பிலி - 8 அல்லது 10 குச்சிகள்,
பெருங்காயம் - சிறுதுண்டு,
காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு (நொறுக்கியது)
தனியா - 2 1/2 டீஸ்பூன்
துவரம்பரும்பு - 1 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது:மேற்கூறிய பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் அரைத்துப் பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். (பொடியாக தயார் செய்யாமல் உடனடியாக குழம்பு செய்தும் சாப்பிடலாம்.)
குழம்பு தயாரி்க்க என்னென்ன தேவை
:
புளி-எலுமிச்சை அளவு(நன்கு
கரைத்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது ?
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். புளி கரைசலுடன் தேவையான அளவு மருந்து பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டால் மருந்து குழம்பு தயார்.
இந்த மருந்துக்குழம்பு பொடியை, எல்லா வகை குழம்பு மற்றும் பொரியல் வகையிலும் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நல்ல செரிமானம் ஆகும். அசைவ சமையலிலும் இந்த ெபாடியை சேர்த்துக் கொள்ளலாம். சுகப்பிரசவம் ஏற்பட்டவர்கள் 20 நாட்களுக்குப் பிறகும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் ஒரு மாதத்துக்குப் பிறகும் சாப்பிடலாம். இதனால், தாய்ப்பால் சுரப்புத்தன்மை அதிகரிக்கும். கர்ப்பப்பை திருப்பி சுருங்கி பழைய நிலைக்கு திரும்ப உதவும். உடல் எடை ஏறாமல் தடுக்கும்.
வயிற்று ரணம் ஆறும். சளி, காய்ச்சல், இருமல் இவை இல்லாமல் இருக்கும். மொத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இந்த மருந்து பொடியை கஷாயம் வைத்தும் குடிக்கலாம். லேகியம் செய்தும் சாப்பிடலாம். குழந்தை பிறந்த பிறகு மூன்று மாதங்கள் வரையிலாவது இப்பத்தியச்
சாப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
3 மாதத்திற்கு பிறகும் வாரம் ஒருமுறை இப்பவுடரில் மருந்து குழம்பு வைத்து சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்புசக்தி கூடும். இயற்கையாகக் கிடைக்கிற இம்மருந்துகளைப் பயன்படுத்தி குழந்தை பிறந்த தாய்மார்களும் மற்றவர்களும் பயனடையலாம். இந்த மருந்து குழம்பு பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது’’ என்றார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||