தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவான பால் தேவையை சமாளிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் தினமும் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மாநிலத்தின் வணிக பயன்பாட்டில் 85 சதவீதம் தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரத்தை தலைமையிடமாக கொண்டு டோட்லா, திருமலா, ஹெரிட்டேஜ், ஜெர்சி உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது திருமலா, டோட்லா, ஜெர்சி, ஹெரிடேஜ் ஆகிய 4 தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு குறித்து பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டோட்லா, ஜெர்சி ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தியுள்ளன. அதேபோன்று திருமலா, ஹெரிடேஜ் ஆகிய நிறுவனங்கள் திங்கள்கிழமை (மார்ச் 6) நள்ளிரவு முதல் பாலுக்கு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரையும், தயிருக்கு ஒரு லிட்டருக்கு ரூ.5-ம் விலை உயர்த்தவுள்ளன. இதனால் ஹோட்டல், தனியார் நிறுவன உணவு விடுதிகளில் டீ, காபி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு லிட்டர் தயிர் ரூ.50-இல் இருந்து 55 ஆகவும், 200 மில்லி பாக்கெட் ரூ.10-இல் இருந்து ரூ.11 ஆகவும் உயர்கிறது. ஆவின் பாலை விட தனியார் பால் லிட்டருக்கு ரூ.8 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பால் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்கள், தனியார் நிறுவன உணவு விடுதிகளில் காபி மற்றும் டீ விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பால் முகவர் சங்கம் கண்டனம்: இந்த விலையேற்றத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இது குறித்து தமிழகத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்கான அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் பழைய, புதிய விற்பனை விலைப் பட்டியல்
இருமுறை சமன்படுத்தப்ட்ட பால் ரூ.36 ரூ.38 சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40 ரூ.42 சிறப்பு சமன்படுத்தப்பட்ட பால் ரூ.38 ரூ.40 நிலைபடுத்தப்பட்ட பால் ரூ.40 ரூ.50 கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52 ரூ.54 தயிர் ரூ.50 ரூ.55
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||