அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சசிகலா தரப்பினர் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். தினமும் ரிசார்ட்டுக்கு சசிகலா சென்று எம்.எல்.ஏக்களை மிரட்டி வந்தார் என்று உயிர் தப்பி வந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ சரவணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான் மட்டும் இல்லை ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வம் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏக்களை சித்ரவதை செய்து வருகின்றனர் என்றார். சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தினமும் ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqb6ToBFejDvFTHLd3cxGMI_L1zEFPMPULx7HTjwZIt2s1OmXAnvHaWZhTCOZnExeKMST5hrStllxDhqCRO8Zia55L5hG6tTrIUVglLBtoOouOB3c_0QCjFy_JduuIXa6hBnoC0vvPCs0/s251/kalvichudar.gif)
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||