முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகிறார் இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டுகின்றனர்
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பிளவு பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த அணியில் அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனு சாமி, பி.எச்.பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் 10 எம்.எல்.ஏ.க்களும் 11 எம்.பி.க்களும் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் படுவார் என்று ஏற்கனவே மதுசூதனன் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு சென்றார். அவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார். தற்போது கட்சி பணிகளை தினகரன் கவனிக்கிறார். தினகரன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்காக மாவட்டம் தோறும் பொதுக் குழு உறுப்பினர்களையும், தொண்டர்களையும் திரட்டி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு பன்னீர்செல்வம் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதன் பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||