தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஓ.பி.எஸ்., அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கோரிக்கை குறித்து 3 பக்க அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.
தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் அறிக்கை விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிப்பு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாராம்சம் பின்வருமாறு
தற்போதைக்கு ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க இயலாது காரணம் வருகின்ற வாரத்தில் சொத்து குவிப்பு தீர்ப்பு வரவிருக்கின்ற காரணத்தால் இப்போதைக்கு முடிவு எடுப்பதினை தாமதிக்கிறேன்.
சசிகலா சட்டமன்ற தலைவராக (5/2/17) தேர்ந்தெடுக்கப்பட்டபோது OPS முன் மொழிந்தார் அவேரே தற்போது கட்டாயத்தின் பெயரில் செயல்பட்டேன் என்கிறார் ஆகவே அது பற்றி விசாரிக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரிக்க உத்தரவுவிட்டுள்ளேன்.
சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது ஜல்லிகட்டு மிக அமைதியாக நடந்து முடிந்துள்ளது ஆகவே தற்போதைக்கு முதலமைச்சர் பதவியேற்பு என்பது அவ்வளவு அவசரம் இல்லை. தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்க விரும்புகிறேன். என தனது அறிக்கையினை உள்துறை அமைச்சகத்துகு அனுப்பியுள்ளார்.
இது அறிக்கை மட்டுமே ஆளுநர் முடிவு இல்லை உள்துறை அமைச்சகத்தின் கருத்தினை பெற்று தனது முடிவினை நாளை தெரிவிப்பார் என தெரிகிறது.