t> கல்விச்சுடர் தமிழக அரசியலில் பரபர 10 நாட்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 February 2017

தமிழக அரசியலில் பரபர 10 நாட்கள்


ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5ம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் நடந்த அரசியல் பரபரப்புகள் வருமாறு:
* பிப்ரவரி: 5ம் தேதி: தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 6ம் தேதி: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே விளக்கம் அளித்தார்.
* 7ம் தேதி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணியளவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். தன்னை அதிமுக தலைமை மிரட்டியதாகவும் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் எனவும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
* சசிகலா ஆலோசனையின் பேரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 சொகுசு பஸ்களில் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
* அதிமுக எம்.பி. மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன் ஆகியோர் ஒபிஎஸ்சுக்கு ஆதரவு அளித்தனர்
* 9ம் தேதி: கவர்னருடன் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனித்தனியாக சந்திப்பு.
* 10ம் தேதி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார்.
* 11ம் தேதி: ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் பலம் 6 ஆக உயர்ந்தது.
* ஆளுநரை மிரட்டும் வகையில் சசிகலா பேட்டி.
* எம்.எல்.ஏ. கடத்தல் புகாரை தொடர்ந்து சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களிடம் தாசில்தார் 5 மணிநேரம் விசாரணை.
* 12ம் தேதி கூவத்தூருக்கு சசிகலா சென்றார்.
* 13ம் தேதி: ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு.
* 14ம் தேதி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில், ரூ.10 கோடி அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.
* அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை.
* அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
* அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களை நீக்கி சசிகலா உத்தரவு.
* டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பு. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம்.
* பன்னீர்செல்வத்துக்கு செம்மலை, சின்ராஜ் எம்.எல்.ஏ. ஆதரவு.
* கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தார்.
* ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து பேசினார்.
* பெங்களூரு சிறைக்கு புறப்பட்ட சசிகலா வழியில் ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை சபதம் எடுத்தார்.
* கவர்னருடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திப்பு.
* 16ம் தேதி: எடப்பாடி பழனிசாமி கவர்னருடன் மீண்டும் சந்திப்பு.
* ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார்.
* தர்மயுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.


JOIN KALVICHUDAR CHANNEL