வதந்திகளை நம்ப வேண்டாம் 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும் ரிசர்வ் வங்கிதிட்டவட்ட அறிவிப்பு | ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால்தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்தில் விடுகிறது. நாணயங்கள் நீண்ட காலத்திற்குப்புழக்கத்தில் இருக்கும். ஆகவே, வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள்புழக்கத்தில் இருக்க வாய்ப்புண்டு. இதில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவெனில்,ஜூலை 2011-ல் நாணயங்களில் ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணமாக,ரூ.10 நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும்வெளியிடப்பட்டுள்ளன. அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படிசெல்லுபடியாகக் கூடியவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவை. அதிகமாகவிவரங்களை அறியாத சிலர், நாட்டின் சில பகுதிகளில், இத்தகு நாணயங்களின்நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை சாதாரண மனிதர்கள் (சிறு வியாபாரிகள் உள்பட)மனதில் உருவாக்கி, இந்த நாணயங்களின் புழக்கத்திற்கு குந்தகம் விளைவித்துவருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த குழப்பம், சந்தேகம் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.பொதுமக்கள் இத்தகு முழு விவரங்களை அறியாததால் தோன்றும் கோட்பாடுகளுக்குமதிப்புத் தராமல், அவற்றை ஒதுக்கித் தொடர்ந்து இந்த நாணயங்களைத் தங்களின்அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் தயக்கமின்றி, சட்டப்படி செல்லுபடியாகும்படிபயன்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||