நல்ல உணவு அடிப்படைக் கொள்கையை
வெறும் 10 வார்த்தைகளில் சொல்ல முடியும். எளிய
உணவைக்,குறைவாக சாப்பிட்டு,அதிக
வேலை செய்து (ஒரே இடத்தில்
அமர்ந்து செய்யும் வேலையை விட குனிந்து,நிமிர்ந்து செய்யும் வேலை சிறந்தது) ,அதிக
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள
வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள் ,துரித
உணவுகள் ,சிவப்பு இறைச்சி ,பதப்படுத்தப்பட்ட
உணவுகள் இவை அனைத்தையும் தவிர்த்து
வந்தாலே உடல் பருமனில் இருந்தும்
பல்வேறு விதமான நோய்களில் இருந்தும்
தப்பிக்கலாம்.
உடல் பராமரிப்பு :
ஆரோக்கியமான
உணவு முறையை பின்பற்றாதவர்கள் உடல்
பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.உடல் எடையைக்
குறைக்க உணவுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
அவை:
1.குறைந்த
கொழுப்பு
2.குறைந்த
கார்போஹைடிரேட்
3.குறைந்த
கலோரி
4. உடல்
கட்டுப்பாடு மற்றும் பயிற்சி :
குறைந்த
கொழுப்பு:
இந்த வகை உணவுகளில்
கொழுப்பின் அளவு மிகக் குறைவாக
உள்ளது.இதனால் தினமும் எடுக்க
வேண்டிய உணவில் கலோரியின் அளவு
குறைபடும்.இதனால் இந்த வகை
உணவு எடுக்கும்போது 3-4 கிலோ வரை எடை
குறையும்.
குறைந்த கார்போஹைடிரேட்:
இந்த வகை உணவுகளில் அட்கின்ஸ்
மற்றும் புரதம் உயர்ந்து உள்ளது.
குறைந்த
கலோரி:
இந்த வகை உணவுகளில் இருந்து
தினமும் உடலுக்கு 500-1000 கலோரிகள் கிடைக்கிறது.இதனைப் பின்பற்றினால் வாரத்திற்கு
0.5-1 கிலோ வரை எடை குறையும்.
மிகவும் குறைந்த கலோரி:
இந்த பிரிவின் கீழ் உணவு முறையை
பின்பற்றினால் நமது உடலுக்கு தினமும்
200-800 கலோரிகள் மட்டுமே கிடைக்கும்.இந்த
கலோரியானது புரதத்தில் இருந்து அதிகமாகவும்,கொழுப்பு
மற்றும் கார்போஹைடிரேடில் இருந்து குறைவாகவும் கிடைக்கிறது.
உடல் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி :
உணவுக்
கட்டுப்பாடு என்பது உடல் எடையைக்
குறைக்க (அ) அதிகரிக்க (அ)
பராமரிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்படும் விதத்தில்
உணவு உண்ணும் பழக்கம்.உணவுக்
கட்டுப்பாடு என்பது கட்டுப்படுத்தப்பட்ட உணவு
மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்து உள்ளது.
அதிக கொழுப்பை எப்படி உடல் நீக்குகிறது?
அதிக கொழுப்பை எப்படி உடல் நீக்குகிறது?
நமது உணவின் மூலம் நாம்
எடுக்கும் கொழுப்பானது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.
நமது உடல் அதிகப்படி வேலை
செய்யும்போது (எ.கா,உடற்பயிற்சி
செய்யும் போது)உடலில் உள்ள
கொழுப்பு எரிக்க படுகிறது.நமது
உடலில் தினமும் எடுக்கும் கொழுப்பின்
அளவு குறைவாக இருப்பின் நமது
உடல் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பைக் கரைக்கிறது.இவ்வாறு நமது உடலில்
கொழுப்பு குறைக்கப்படுகிறது.
உடல் எடையை எப்படி குறைப்பது?
1.சரியான
உணவை உட்கொள்வது:
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
சாப்பிட வேண்டும்.பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை
மற்றும் காய்கறிகள் பசியை நீக்கி வயிற்றை
நிரப்புகிறது.அவற்றில் பைபர் உள்ளதால் விரைவில்
பசி உணர்வு ஏற்படாது.உணவில்
அதிகப்படியான பழங்கள் மற்றும் காய்கறிகள்
அறிமுகப்படுத்த சில குறிப்புகள்:
2.கார்போஹைட்ரடைத்
தவிர்த்து முழு தானியங்கள் எடுக்க
வேண்டும்:
கோதுமை
ரொட்டி,ஓட்ஸ்,இனிப்பு உருளைக்கிழங்கு
மற்றும் பழுப்பு அரிசி இவற்றில்
ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை
ரொட்டி,பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் வெள்ளை
சர்க்கரை இவற்றில் கார்போஹைடிரேட் அதிகமாக உள்ளது.இவை
உடலுக்கு விரைவில் ஆற்றலைத் தருகிறது ஆனால் அது கொழுப்பாக
மாறி விரைவில் ஆபத்தாக மாறுகிறது.
3. புரோடீன் தேர்வு செய்ய வேண்டும்:
உடலின்
உள்ளுறுப்புகளின் செயல்பாட்டிற்கு புரதம் முக்கியமானது.இறைச்சியில்
தோலை நீக்கி விட வேண்டும்.காய்கறி மட்டும் உண்பவர்களுக்கு
சோயா பொருட்கள்,பீன்ஸ் விதைகள்,பயறு
வகைகளில் அதிக புரதம் கிடைக்கிறது.
4.உணவு
முறைத் திட்டம் :
இது முறையான மருத்துவர்களின் பரிந்துரையின்
படி அனைத்து விதமான ரத்த
பரிசோதனைகள் செய்து பிறகு உணவுத்
திட்டத்தைப் பின்பற்றலாம்.
5.உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்:
உணவில் உப்பின் அளவைக்
குறைக்க வேண்டும்.ஏனெனில் சோடியமானது உடம்பை
எடை கூடச் செய்கிறது.உணவில்
உப்பின் அளவைக் குறைத்தாலே உடல்
எடை எளிதாக குறைய வாய்ப்பு
உள்ளது.
6.உணவைத் தவிர்க்க வேண்டாம்:
ஒரு சிலர் ஒரு வேளை
உணவைக் குறைத்தால் எளிதாக உடல் எடையைக்
குறைக்கலாம் என்று நம்புகின்றனர் இது
தவறு.ஏனெனில் மூன்று வேளை
உணவு எடுப்பவர்களின் எடையானது சரியான அளவில் உள்ளது
என்று கண்டறியப்பட்டுள்ளது.