t> கல்விச்சுடர் இரண்டே நிமிடங்களில் பற்களின் கறையைப் போக்குவது எப்படி?? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 January 2017

இரண்டே நிமிடங்களில் பற்களின் கறையைப் போக்குவது எப்படி??



அடுத்தவர்களைக் கவர்வதற்கு முதலில் நாம் பயன்படுத்தும் யுக்தியே புன்னகை தான். மனிதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த புன்னகை. சில சமயங்களில் மிகப்பெரிய பிரச்னைகளைக்கூட, புன்னகை மூலம் மிக எளிமையாக விரட்டிவிட முடியும்.
ஆனால், கறை படிந்த பற்களோடு எதிரிலிருப்பவரைப் பார்த்து சிரித்தால் எப்படி இருக்கும்?
 நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா? வெறும் மூன்று நிமிடங்களை ஒதுக்கினாலே போதும். முத்துப்போன்ற பளிச்சிடும் பற்களைப் பெற முடியும்.
இதற்கு மிகப்பெரிதாய் எதுவும் மெனக்கெடத் தேவையில்லை.

 வீட்டிலிருக்கும் எலுமிச்சையும் பேக்கிங் சோடாவுமே போதும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சை சாறு பிழியும் போது நுரை வரும். அதை ஸ்பூனால் நன்கு கலந்து, நுரைபொங்க அடித்துவிட்டு, நுரை முழுவதும் போனதும் அந்த கலவையை விரல்களாலோ அல்லது காட்டனிலோ எடுத்து பற்களில் நன்கு இரண்டு நிமிடங்கள் வரையிலும் தேய்க்க வேண்டும்.
காட்டனில் இந்த கலவையை எடுத்துத் தேய்க்கும் போது, பற்களில் உள்ள கறைகள் அதோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு வருவதை உங்களால் பார்க்க முடியும். பின்பு குளிர்ந்த நீரால் வாயை நன்கு கொப்பளித்துப் பின்னர் எப்போதும் போல் பிரஷ் செய்ய வேண்டும்.

JOIN KALVICHUDAR CHANNEL