t> கல்விச்சுடர் டூ வீலர் இருந்தால் சோறு கட்.. மத்திய அரசு அதிரடி..! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2017

டூ வீலர் இருந்தால் சோறு கட்.. மத்திய அரசு அதிரடி..!

தமிழகத்தில் உள்ள 33,973 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில், பருப்பு, பாமாயில் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது.

ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போது அந்த திட்டங்களுக்கு ஓ.பி.எஸ் தலைமையிலான அரசு ஆதரவு அளித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அதன்படி ஒரு கிலோ ரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அரிசி விலை இரண்டு மடங்காக உயர்ந்ததால் தமிழக அரசுக்கு நிதி சுமை ஏற்பட்டது. அதனை குறைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 60 சதவீதம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது 1.20 கோடி கார்டுகளுக்கு அரிசி நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதன்படி ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்து செய்ய தமிழக அரசு ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.

இதனால் விரைவில் இந்த புதிய சட்டம் நடைமுறை வரலாம். அப்போது ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL