t> கல்விச்சுடர் ஓ.பி.எஸ் பேச்சை புறக்கணித்த சசிகலா - சென்னையில் நடந்த விழாவில் பரபரப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 January 2017

ஓ.பி.எஸ் பேச்சை புறக்கணித்த சசிகலா - சென்னையில் நடந்த விழாவில் பரபரப்பு


சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும் போது, சசிகலா அதை புறக்கணித்து விட்டு சென்றார். இது விழா அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆங்கில மாத இதழ் ஒன்றின் விழா இன்று காலையில் நடந்தது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட தென்மாநில முதல்வர்கள், மற்றும் பல விஐபிக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அதிமுக பொது செயலாளர் சசிகலாவும் பங்கேற்றார்.
விழாவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆங்கிலத்தில் தன் உரையை வாசித்தார். அப்போது சசிகலா விருட்டென்று மேடையை விட்டு கிளம்பினார். தலைமைக் கழகத்தில் அவசர வேலையாக அவர் புறப்பட்டதாக காரணம் கூறப்பட்டாலும், தன் கட்சியை சேர்ந்த ஒரு முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே அவர் எழுந்து சென்றது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL