t> கல்விச்சுடர் மாதுளையின் மகத்துவம்... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 January 2017

மாதுளையின் மகத்துவம்...



உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. மேலும், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.

புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.


JOIN KALVICHUDAR CHANNEL