t> கல்விச்சுடர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அரசு விடுமுறை. பொங்கல் விடுமுறையில் மேலும் ஒருநாள்! விரைவில் அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 January 2017

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அரசு விடுமுறை. பொங்கல் விடுமுறையில் மேலும் ஒருநாள்! விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை முதல் தொடங்குவதால், போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் தினம் என ஜனவரி 16 வரை விடுமுறையாக உள்ளது. இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காரணமாக அன்றைய தினமும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் விடுமுறையில் மேலும் ஒருநாள் அதிகரித்துள்ளது.
இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய-மாநில அரசுகளின் விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும் என தெரிகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL