உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான ரயில் விபத்துகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் ஆஜ்மிர்-சீல்டா எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கான்பூர் அருகே நிகழ்ந்த இந்த இரு விபத்துகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இந்திய-நேபாள எல்லையில், உமாசங்கர் பட்டேல் உட்பட 3 பேரை பீகார் மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட இம்மூவரும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் கட்டளைப்படியே உத்தரப்பிரதேசத்தில் ரயில் கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||