t> கல்விச்சுடர் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 January 2017

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்



மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான சில பாடங்களின் தேர்வுத் தேதிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மாற்றியுள்ளது.
10-ஆம் வகுப்புக்கு தமிழ் (006), குருங்க் (132), என்சிசி (076) ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடத்துக்கு மார்ச் 10-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தத் தேர்வு மார்ச் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த குருங்க் தேர்வு மார்ச் 10-ஆம் தேதிக்கும், என்சிசி தேர்வு மார்ச் 23-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், 12-ஆம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அவற்றில் உடற்கல்வி தேர்வு ஏப்ரல் 10-இல் இருந்து 12-ஆம் தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-இல் இருந்து ஏப்ரல் 20-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. நாடக ஆய்வுப் படிப்பு (தியேட்டர் ஸ்டடீஸ்), தங்குல் மொழி ஆகிய இரண்டு தேர்வுகளும் ஏப்ரல்10-ஆம் தேதிக்கும், உணவுச் சேவை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.
உயிரியல் தேர்வுக்கும், இணை நுழைவுத் தேர்வுக்கும் இடையே குறுகிய கால இடைவெளியே இருப்பதாக மாணவர்களும், பெற்றோர்களும் புகார் அளித்தனர். எனினும், அவர்களின் கோரிக்கையை சிபிஎஸ்இ ஏற்கவில்லை. நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும், 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வையும் எழுத உள்ளனர்.


JOIN KALVICHUDAR CHANNEL